"உலகம் யாருக்கு?" சிறுகதையில், “எல்லாரும் அப்படித்தானே இருக்கிறார்கள்! உலகம் தனக்காகத்தான் இருக்கிறது என்று எவன்தான் நினைக்கவில்லை?”
"17ம் நம்பர் வீட்டு நாய்" சிறுகதையில், தன்னுடைய சுதந்திர வாழ்க்கையை நினைக்க நினைக்க அதற்குப் பேரானந்தமாக இருந்தது. குரைக்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்வதற்காகத் தெருவெல்லாம் குரைத்துக் கொண்டே ஓடிவந்தது. தெருவோடு வந்த பையன் ஒருவன் நாய் குரைப்பதைப் பார்த்து பயந்து விட்டான். தன்னைக் கடிக்கத்தான் வருகிறது என்று நினைத்து ஒரு கல்லை எடுத்து நாயின்மேல் எறிந்தான். எறிந்த கல் நாயின்மேல் விழுவதற்கு முன்பாகவே கம்பியை நீட்டிவிட்டான். ஒரு கால் ஒடிந்து போய்விட்டது. சுற்றும்முற்றும் பையனைக் காணாததால், பலமாகக் குரைத்துக்கொண்டே 17ஆம் நம்பர் வீட்டுக்குள் நுழைந்தது நாய்.